அத்தனையும் ஒரு நாளில்…

விஞ்ஞானத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்
விந்தைகள் கொண்ட கரு உருவாக்கத்தை
விந்துகள் செலுத்தப்படுவது ஆணிலிருந்தாம்
விரைந்தவை கருவாவது பெண்ணிலிருந்தாம்

அவ்வுருக் கொடுத்த ஆண்தான் அப்பாவாம்
அவை பெற்று எமை உருவாக்கி
அவளுயிர் ஈந்து கருவாக்கி
அகிலத்தைக் காட்டுபவள் அம்மாவாம்

அப்பா இருந்திருக்க வேண்டும்
அவரால் தான் கருவாக்கப்பட்டிருப்போம்
அன்னையும் இருந்திருப்பாள்
அதனால்தான் உயிர்த்திருக்கிறோம்

நாட்களும் நகர்கின்ற போது
நாண்டுவிடுகின்றனர் மனிதர்கள்
நகர்ந்த நாட்களினூடே
நாடியடங்கியவர்களின் பிள்ளைகள் நாங்கள்

ஆயுள் முடிந்து போயினர் பெற்றோர்
அதற்காக நாங்கள் அநாதையில்லை
ஆண்டுகள் கடக்கின்ற போது
ஆயுட்கள் ஒவ்வொன்றும் முடிந்துதான் போகும்
அத்தனை உயிரும் -ஒரு நாளில்
அநாதையாய்த்தான் ஆகும்

2 கருத்துகள்:

  1. நல்ல கவிதை தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே... எனது கவிதைகள் அத்தனைக்கும் நீங்கள் தருகின்ற ஊக்கம் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகின்றது..

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..