உனக்கான நாளல்ல...



இருபத்தி நான்கு நடக்கின்ற எனக்கு- இன்றுதான்
பத்தொன்பது கடந்தாலும்
பதினான்கிலேயே தந்தையாய் மாறி- சமயத்தில்
யாதுமாகிப் போனதும் நீதான்



















துவண்டு நான்- எத்தனையோ
தடவைகள் தடுக்கி விழுந்திருக்கிறேன்
தூக்கி நிறுத்தியது -உன்
தாங்கல்கள் மட்டும் தான்















தொலை தூரங்கள் -நான்
சென்ற ஒவ்வொரு பயணங்களிலும்
தூங்க இடம் தந்ததும்- உன்
தோள்கள் தான்













ஆண்மைக்குள் மென்மை கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆண்மையில் தாய்மை
முதன்முறை உணர்ந்தது
உன்னிடம்தான்












தந்தையின் பாதுகாப்பும்
தமையனின் பரிவும்- வேண்டுகிற போது
தாயின் அரவணைப்பும்
தாரளமாய்த் தந்திருக்கிறாய்

















எனக்கான நாளுக்கான பதிவு இது- என்
அனைத்துமான சகோதரன்
பத்தொன்பதை நிறைத்து
இருபதை நெருங்கும் -
இப்பூமிக்கு வந்தநாள் 
இது எனக்கான நாள்




உன்மேல வார கோபத்துக்கு....

என்ன எப்பயுமே விழிக்க வைக்கிறது என்னோட போன் தான் அழைப்பது நீதான்...
நீ தூக்கம் விழித்த அடுத்த வினாடியே நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளுவாய்...
“உனக்கு சொல்றது தானே என் தூக்கத்தக் கெடுக்காதே என்று.. எழும்பினா போய் குளிடா...”

சந்திக்கின்ற பொழுதுகளிலும் சதா என்னோடு 
சிரித்துப் பேசிக் கொண்டுதான் வருகிறாய்
என் கைகளையும்​ சமயத்தில் பற்றிக் கொள்வாய் எப்போதுமே உன்னோடு நான் இருப்பேன் என்று அறியப்படுத்த...
'கைய விடு ஒனக்கு சொல்லி இருக்கேன் கையப் புடிக்காத என்று' கையை உதறி விட்டுக்கொண்டே உன்னைப் பார்ப்பேன்..
அப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருப்பாய்..
'கொஞ்சம் நிப்பாட்டுறியா சிரிக்கிறத...' முறைத்துக்கொண்டே நான் சற்று முன்னே நடப்பேன்...

'புதுசா தனுஷ் படம் ரிலீஸாயிருக்கு பார்க்கப் போவமே
தங்கம்...'

மறுபடியும் என் கையைப் பற்றிக் கொண்டே கெஞ்சுவாய்..
ஜோடியா படத்துக்கு வருவேன் நானும்இ சந்தோசமாத்தான்
ஆனா உனக்குச் சொல்ல மாட்டேன் எனக்கும் படம் பார்க்கிறது
புடிக்கும் என்று...

ஆனா அங்கு விசில் சத்தங்களும்
இரட்டை அர்த்த வசனங்களும்
பெண்களையே சாடுகின்ற கேலிப் பேச்சுக்களும் கேட்டுக்
கொண்டுதானிருக்கும்...
அந்த நேரத்தில ஒன்மேல எனக்கு வரும் பாரு ஒருகோபம்...

'இங்க ஏன் என்ன கூட்டி வந்த... ஒனக்குத் தெரியும் தானே
எனக்குப் படம் பார்க்கப் புடிக்காது என்று..'

'பசிக்குதுடா எங்கயாவது போய் சாப்பிடுவமா...'

உன் மேல சாய்ந்துக்கிட்டே நான் கேட்பேன்..
நீயும் எனக்குப் புடிச்ச இடத்துக்கு அழைத்துப் போய் உட்கார
வைத்து
எனக்கு புடிச்ச உணவுடன் சாக்லட் ப்ளேவர் ஐஸ் க்ரீமும்
டெஸர்ட் என்ற பெயரில் வாங்கி வருவாய்..
சாப்பிட்டு முடிந்த பின்னும் நான் சொல்வேன்..
உனக்கு என்னடா அவ்வளவு கோபம் என்மேல கரைஞ்சு
போன ஐஸ் க்ரீம வாங்கித் தந்த...'

தூங்கப்போற நேரம் போன் பண்ணுவன்..
'என்னப்பா செய்ற? எனக்கு கோல் எடுக்கவேயில்ல...
'இல்ல செல்லம் கொஞ்சம் வேலயா இருக்கேன்..'
'ம்..ஹ்... உனக்குவேலயிருந்தா எனக்குபோன் பண்ண மாட்ட...
வேலயில்லாட்டித்தான் போன் பண்ணுவ அப்பிடியா...
'இல்ல தங்கம்.. நான் உனக்குகோல் பண்ணதான் இருந்தன்
 நீ எடுத்திட்ட....'
'இந்த சமாளிபிகேஷன் எல்லாம் எனக்குட்ட சரிவராது.
அப்போ வேலயில்லாட்டி கம்பனி தரத்தான் நான் இருக்கேன்...'
'ஐயோ...இப்ப ஏன் சண்ட புடிக்கிற?
'ஆமா நான் சண்ட புடிக்கறேன்.. நீ சண்டயே போடாத
ஒருத்திய தேடிப்போய் கல்யாணம் கட்டு... என்ன விடு..
எனக்கு இனிபோன் பண்ணாத....'
நான் அழைப்புத் துண்டித்த தொடர்ச்சியான
அடுத்த நான்கு நிமிடங்களுக்கும்
எனது தொலை பேசிசொல்லிக்கொண்டிருக்கும்...

“Honey calling… Honey calling”

அடுத்த நிமிடத்தில்...

தொலைபேசி தூக்கி நான் இப்போது வாசிக்கிறேன்.
'சண்டை போட்டுட்டே இருக்கிறதுக்கும் நீ தான் டீ எனக்குவேணும்...'
அடுத்த நிமிடம் என் அவனின்  தொலை பேசி சொல்லிக் கொண்டிருக்கும்..
“Chells calling… Chells calling…”
தொலைபேசி தூக்கி நான் இப்போது வாசிக்கிறேன்.
'சண்டை போட்டுட்டே இருக்கிறதுக்கும் நீ தான் டீ எனக்குவேணும்...'
அடுத்த நிமிடம் என் அவனின்  தொலை பேசி சொல்லிக் கொண்டிருக்கும்..
“Chells calling… Chells calling…”

என் அவனே..
உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் எனக்கு கோபத்தில் தான் கழிகிறது
கழிகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் சந்தோசம் தான் நிறைகிறது
கோபத்தில் கூட சந்தோசம் நிறைவது உன்காதலில் மட்டும் தான்
சந்தோசிக்கவே கோபம் கொள்வதும் உன்னில் மட்டும் தான்..