அவனும் மனிதனே - நூற்றாண்டு தாண்டியும் முடிவுறாத வெறுப்பு

தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் அயலவரைக் கூட அறிய முடியாதவர்களாகிறோம். ஆனாலும் உலகம் சொல்லுகின்ற பெயர்களையும் அவர்களின் சரிதங்களையும் கற்பதிலும் விமர்சிப்பதிலும் என்றுமே எம்மவர்க்கு தனிப் பிரியம் இருப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை. இந்ந வகையில் எம் மனதில் நாம் வீரர்களென கருதுபவர்கள் பற்றியோ அல்லது நானும் மனித இனம் என்று சொல்வதற்கு கூச்சப்பட செய்பவர்கள் பற்றியோ தேடிப்படிப்பது சுவாரஸ்யமிக்கது. விரும்பினால் மானசீகமாக அவர்களை தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது வெறுத்து ஒதுக்கி விமர்சிப்பதற்கோ, ஆழச் சென்று அவர்களுடைய முற்பட்ட வாழ்ககையைக் கிளறி ஆராய்வது முக்கியமே.

இதற்காக உலகம் உச்சரிக்கின்ற அநேகமான பெயர்களில் ஓரளவு தனி இடத்தை வகிப்பது 'அடோல்ப் ஹிட்லர்' என்பதை மனது விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டித்தான் இருக்கின்றது. கடந்த நூற்றாண்டின் கசப்பு நிறைந்த காலப்பகுதியென அடையாளப்படுத்தக் கூடிய அருவறுப்புப் பகுதி ஹிட்லரின் காலம்தான். வெறும் 56 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்த அவருக்கு, முதல் 30 ஆண்டுகள் அவருக்கே அடையாளம் தெரியாது. தன்னுள்ளே கிடந்த சக்தியை திரட்டி எடுத்து பின் வந்த 26 ஆண்டுகள்தான் உலகமே சற்று மூச்சையுற்று, இவன் மனித இனத்துள் அடக்கமா? என்று சந்தேகித்து திரும்பிப் பார்த்து நின்ற காலம். ஹிட்லரின் வாழ்க்கை ஏராளமான எழுத்தாளர்களால் எத்தனையோ மொழிகளில் எழுதிக்குவிக்கப்பட்டது. இந்த பகுதியும் சற்று வித்தியாசமாய், வாசிப்பவரை நின்று நிறுத்தி தொடர்ந்து சுவாரஸ்யமாக ஹிட்லரின் வாழ்க்கையின் உண்மைக் சம்பவங்களை அறிந்து கொள்ளுவதற்காக தொடர்ந்தும் எழுதப்படப்போகிறது.

அன்புடன் சஜீ
12-12-2012

7 கருத்துகள்:

  1. தொடருங்கள் அறிய ஆவலாக இருக்கிறோம்
    நீண்ட நாட்களின் பின் பதிவு கண்டதில் சந்தோஷம் பக்க வடிவமைப்பும் அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. தொடர்ச்சியான எனது எழுத்துலக நிலைப்புக்கு உங்கள் போன்ற அனுபவம் மிக்கவர்களின் ஆதரவும் ஆசியும் எனக்குத் தேவை.

      நீக்கு
  2. வண்க்கம்,

    ஹிட்லர் ஒரு மன் நோயாளி என்பதும்,முதல் உலகப்போரில் தோற்ற ஜெர்மனியில் தோல்விக்கு யூதர்களை பலியாடாக காட்டிய ஹிட்லரின் முயற்சி வெற்றி அடைந்தது மனித வரலாற்றில் ஒரு கருப்பு பக்கமே!!.இன்வெறி பேசும் எந்த கொள்கையும் ,மதமும் மண்ணோடு மண்ணாகும் என்பதே வரலாறு!!

    நடுநிலையோடுஇனம், மதம் சாராமல் எழுதினால் நன்று!!.

    நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.. இன, மத வேறுபாடுகள் கடந்து ஹிட்லரின் வாழ்க்கையைக் கூறுவதாகவே இத்தொடர் பதிவு அமையும் என்பது உறுதி. தொடர்ந்தும் இப்பதிவுகளுடன் இணைந்திருக்க வேண்டுகிறேன். நன்றி,

      நீக்கு
  3. மனித இனம் வரலாறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.. வெறுமனனே வரலாறுகளை திரும்ப திரும்ப எழுதுவதில் இருக்கும் அனுகூலத்திலும், வரலாறுகள் மீதானா விமர்சமும் , விவாதமுமே எங்களது தேவையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி, தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுகின்றேன்.

      நீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..