“Billa-II”- எனது வித்தியாசமான முயற்சி

அறக்கப் பறக்க
ஆட்டோ பிடித்து
இருட்டிய தியேட்டர்க்குள்
தடுமாறி நடந்து
தட்டுப்பட்ட இருக்கையில் அமர்ந்து
தலயின் Billa-II வில் ஐக்கியமானேன்

ஆரம்பம் ஆர்ப்பாட்டமின்றி
அமைதியாய் அகதி முகாமில்
அவதியான வாழ்க்கையுடன் தொடங்க
‘அகதிகள் தான், ஆனால் அனாதைகள் இல்லை’
அழுத்தமான வசனம் நெஞ்சைத் தொட்டது

ஆரம்பத்திலே அதட்டும் அதிகாரியை
அலட்டாமல் உயிர் வாங்கும் காட்சி
அற்புதம்

‘உட்கார்ந்து வேல வாங்கிறவனுக்கும்
உசிரக் குடுத்து வேல செய்றவனுக்கும்
வித்தியாசம் இருக்கு’
அடிக்கடி சொல்லும் இவ்வசனமும்
அபாரம்

‘சொன்ன நேரத்துக்கு முன்னே போனா வேற வேல இல்லாதவன்னு நெனச்சுடுவாங்க
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லுவாங்க,
சொன்ன நேரத்துக்கு போனாத் தான் நம்ம மேல நம்பிக்க வரும்’
நேரத்துக்குச் சொல்லும்
நேர்த்தியான வசனம்

‘நல்லவங்களக் கண்டுபிடிக்கிறது
ரொம்பக் கஷ;டம்’
உண்மையான வசனம்- சற்று
உறுத்துவதும் கூட

‘இதுவரைக் காட்டிக் குடுத்தவங்க எல்லாம்
கூட இருந்தவங்கதான் சரித்திரத்தைப் புரட்டிப் பாரு
சான்றுகள் இங்கும் நிறைய உண்டு
சாட்டையடியான வசனம்

‘ஆசையில்லை: பசி’
ஆணிவேர் வசனம்
ஆக்கிரமித்தது திரைக்கதையை
அத்தனை அர்த்தமும் இதுதான்

அத்தனை வில்லன்களும் ஒரே உலகில்
அனைவரையும் சமாளிக்கிறார்
அவருக்கு எதுவுமே நிகழ்வதில்லை

தடார் இங்கே ஒருத்தன் விழ
டுமீல் அங்கே உயிர் விழுகிறது
சகிக்க முடியவில்லை
உயிருக்கு இந்த அளவிற்கா மதிப்பில்லை

அழகிய அஜித்துக்கு
அவ்வளவுக்கு கதாநாயகி
அற்பமா திரையுலகில்

என் அனுபவத்தில் சொல்கிறேன்
என்னதான் இருந்தாலும்
உன்னைப் போல் ஒருவன் போலல்ல
சக்ரி டோலேட்டி அவர்களே
சற்று சறுக்கலாய்த்தான் இருக்கும்

வசனத்திற்கு மார்க் வழங்கலாம்
இரா முருகன் இன்னும்
நீண்ட காலம் நிலைத்து நிற்பார்

இசை ஆக்கிரமத்தது
இதமாயும் இருந்தது
யுவனுக்கு நிச்சயமாய்
புது வரவுகள் உண்டு

என் ஆசை ரசிகன் அருகிலிருந்தும்
ரகசியமாய் ரசித்தேன் ‘தல’ யை

அற்புதமான நடிப்பு
அழகான நடை
அள்ளுகிறார் நெஞ்சை
‘தல’ என்றுமே ‘தல’ தான்

- For the request of my partner

2 கருத்துகள்:

  1. அழகு வித்தியாசம்...கலக்கிட்டீங்க
    இப்படியொரு விமர்சனத்தை இதுவரை பார்த்ததில்லை
    நான் இன்னும் பில்லா பார்க்கவில்லை ஆனால் சில பல விமர்சனங்கள் பார்த்தேன் அத்தனையும் ஒரே பல்லவிதான்...

    பில்லா 2.. :(

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி சிட்டுக் குருவி அவர்களே, சீக்கிரம் பார்த்து விடுங்கள்..

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..