ஆனந்தம் கொள்கிறேன்...

தாவித் தாவி ஓடி- பின்
தன் வழியே திரும்பும்
தங்க நிறம் அவை

சிறியவர் உண்டு
பெரிதாய் ஏப்பம் விட
மெதுவாய் நீந்தும்
பொருந்திய இரையை
பொசுக்கென கவ்வும்
கறுப்பு நிறம் அவை

அசைய முடியாத- ஆயினும்
ஆணவம் அவற்றுக்கு
சுவாசம் வழங்கி- தானும்
சுவாசம் கொள்வதாய்

விசேடமாய் ஒன்று
வீதிக்கடையெல்லாம் தேடி
விரைவில் கிடைக்கவில்லை
விருதாக நண்பன் கொடுத்தான்
விரவிய சந்தோசத்தில்
விழுந்து அடித்து ஓடி
விட்டு விட்டேன்
கழிவுகள் அனைத்தும்
கண்ட வயிறு கொண்டது
களிப்பாய்த்தான் கிடக்குது

வழிப்பயணம் முடித்து
வீடு திரும்பிய வழியில்
வடிவாய் சில வண்ண
சுழியோடிகள் கண்டேன்
பிளாத்திக்குத் தான்
பரவாயில்லை பார்க்க அழகு
பையினுள் போட்டேன் பின் வந்து
பொருத்தி மின்னும் வழங்கினேன்

அடிக்கடி கழுவி- என்னை
ஆசுவாசப்படுத்துவது பெரும்பாடு
ஆராத்துயர் கொண்டு
ஆழ்கையில் - நான்
ஆனந்தம் பெறுவது- என்
அழகு மீன் தொட்டியில்தான்

3 கருத்துகள்:

  1. தலைப்புக்குத் தகுந்த அருமையான கவிதை...
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சிட்டடுக் குருவி அவர்களே.. தொடர்ச்சியான உங்கள் வாசிப்புக்கும் ஊக்கப்படுத்தல்களுக்கும்.. மேலும் எனது இடுகைகளுடன் இணைந்திருக்கக் கோருகின்றேன்.. நன்றி..

    பதிலளிநீக்கு

எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..