ஒரு ஞாயிற்றுக்கிழமை, எண்ணமுடியாத அளவு ஆண்களும் பெண்களும் எல்லாருமே கடலலைகளுக்கு முன்னேதான் காதலாகிக் கிடந்தாங்க...
நாங்களும் அப்பிடித்தான். அலைகளுக்கு முன்னே காதலாகிக் கிடக்க ஒரு வசதியான இடத்தை சிரமப்பட்டுக் கைப்பற்றிக்கொண்டோம்...

இவன் வழக்கம் போல “I Love You செல்லம்” ஆரம்பிச்சான்... இவன் I love you வைத் தாண்டி இன்னமொரு I love you…. அதுவும் அழகான குரல்வேற... நான் சுற்றியும் தேடிப்பார்த்து களைச்சுப்போய்.. கடலலைகளையே பார்த்தேனா...
இரண்டு அலைகள் ஒன்றுக்கு பின்னாடி ஒன்று வந்து நேசம் பேசுறாங்க எங்கமேல தூறல்ளைத் தூவிக்கிட்டே... அவங்களும் Love பண்ணுறாங்களாம்...

நாங்க விடுவமா.. பாக்கலான்னு... அலைகள் கிட்ட சொன்னோம்... உங்க காதலா இல்ல எங்க காதலா.. Challenge அப்பிடின்னுட்டு Love பண்ண ஆரம்பிச்சோம்...
மணல்ல நாங்க கைகோர்த்து நடந்தபோது.. அலைகள் வேகவேகமா வந்து எங்க கால்த் தடங்களை அழிக்க ரொம்வே Try பண்ணாங்க.. மறுபடியும் நாங்க கைகோர்த்துக்கிட்டே நடக்க நடக்க மீண்டும் எங்களோட தடங்கள்.... அலைகளும் சோர்ந்து போய்ட்டாங்க..

கொஞ்சநேரத்துல எங்களுக்குள்ள பெரிய சண்ட வந்தது... அலைகளுக்கு பெரிய சந்தோஷம்....கை தட்டிக்கிட்டே வெள்ளை வெள்ளையா பால் நிறத்துல சிரிப்புக் காட்டினாங்க... அடுத்தநொடியே நான் சிரிச்சுக்கிட்டே இவன் தோள்மேல சாய்ந்தனா? என்ன ஒரு ஆக்ரோஷம் அலைகளுக்கு... வேகமா வந்து எங்கமேலா அவங்க சாரலைத் தூவினாங்க.. நாங்களும் எங்க வெற்றிக்கான பரிசு தானே அப்பிடின்னுட்டு அதிகமாவே நனைஞ்சோம்...
என்னசொன்னாலும் இவன்கேட்வே மாட்டான்.. எப்ப Beach போனாலும் இவனுக்கு முத்தம் கொடுக்கனும்... அன்றும் அப்பிடித்தான்.. அலைகளை விட்டு தூரப்போய்த்தான் என் உதட்ட அவன் உதட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டான்.. அப்பகூடப் பாருங்க அலைகளும் எங்களப் பார்த்துக்கிட்டே முத்தம் கொடுத்துக்கிட்டாங்க... ஆனாலும் எங்ளோட நீண்ட நேர முத்தத்துல இருந்த பாசத்தக் கண்டுகிட்டு
நம்மால முடியாதுப்பா.. அப்பிடின்னு தாம் தோல்விதான் என்று துவண்டுபோய் கடலுக்கு அடியில் போய் சேர்ந்துக்கிட்டாங்க...

அன்றுல இருந்து நாங்க Beach பக்கம் போறதில்லங்க... ஏன்னா எங்க காதலப் பார்த்து எத்தன காதல் கூச்சப்படுமோ அப்பிடீங்கிற நல்ல எண்ணத்திலதான்..
அன்புடன் சஜீ..